இயக்குனராகும் திருமதி செல்வராகவன்!

இயக்குனராகும் திருமதி செல்வராகவன்!

செய்திகள் 26-Aug-2014 2:37 PM IST VRC கருத்துக்கள்

ஐஸ்வர்யா தனுஷ், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜே.எஸ்.நந்தினி முதலானோரை தொடர்ந்து தமிழ் சினிமாவில் மற்றுமொரு பெண் இயக்குனர் அறிமுகமாகிறார். அவர் வேறு யாருமல்ல; இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி செல்வராகவன். இவர் இயக்கவிருக்கும் படத்திற்கு ‘மாலை நேரத்து மயக்கம்’ என்று டைட்டில் வைத்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த ‘மயக்கம் என்ன’ படத்திற்கு முதலில் வைத்த டைட்டில் ‘மாலை நேரத்து மயக்கம்’ தான்! இப்போது அந்த டைட்டிலை தனது முதல் படத்திற்கு தலைப்பாக்கியிருக்கிறார் கீதாஞ்சலி செல்வராகவன்! செல்வராகவனின் தம்பியான தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து படங்களை இயக்கி வரும் நிலையில் இப்போது செல்வராகவனின் மனைவியும் இயக்குனராக அறிமுகமாகிறார். ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்? இப்படத்தை யார் தயாரிக்கிறார் என்பது போன்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;