அபராதம் கட்டிவிட்டு ‘பாபநாசம்’ படப்பிடிப்பு ஆரம்பமா?

அபராதம் கட்டிவிட்டு ‘பாபநாசம்’ படப்பிடிப்பு ஆரம்பமா?

செய்திகள் 26-Aug-2014 2:35 PM IST Chandru கருத்துக்கள்

மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்து மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘திருசியம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்திற்கு எதிராக சதீஷ்பால் என்பவர் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். ‘திருசியம்’ படத்தின் கதை தன்னுடைய ‘ஒரு மழைக் காலத்து’ நாவலிலிருந்துதான் எடுக்கப்பட்டது என்ற சதீஷ்பாலின் வாதத்தை ஏற்று, ‘‘ரீமேக் செய்யக்கூடாது அல்லது 10 லட்ச ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம்’’ என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் திருநெல்வேலியில் கமல், கௌதமி பங்குபெறும் ‘பாபநாசம்’ படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது. அது குறித்து விசாரித்தபோது, நீதிமன்றத்தில் கட்ட வேண்டிய அபாரதத் தொகை 10 லட்ச ரூபாயை செலுத்திவிட்டு, படப்பிடிப்பைத் துவங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.

‘திருசியம்’ படத்தின் மலையாள இயக்குனரான ஜீத்து ஜோசப்பே தமிழ் ‘பாபநாசம்’ படத்தையும் இயக்குகிறார். போலீஸ் வேடமொன்றில் கலாபவன் மணியும், போலீஸ் ஐ.ஜியாக மலையாளத்தில் நடித்த ஆஷா சரத்தும், கமலின் மூத்த மகளாக ‘ஜில்லா’வில் நடித்த நிவேதா தாமஸும், இளைய மகளாக ‘திருசியம்’ படத்தில் நடித்த எஸ்தரும் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சகா ட்ரைலர்


;