சுந்தர்.சி. – ராய் லட்சுமி மோதலா?

சுந்தர்.சி. – ராய் லட்சுமி மோதலா?

செய்திகள் 26-Aug-2014 10:59 AM IST Inian கருத்துக்கள்

இயக்குனருக்கு தெரியாமல், ‘அரண்மனை’ டீஸரை வெளியிட்டு விட்டார்கள். இதனால் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி.க்கும், தயாரிப்பாளருக்கும் பெரிய பிரச்சணை என்ற செய்தி ஒய்ந்து முடிந்த வேலையில் ‘அரண்மனை’ படத்திலிருந்து ராய் லட்சுமி நடித்த பலக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி.க்கும் ராய் லட்சுமிக்கும் தகராறு நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின. இது குறித்து ராய் லட்சுமியிடம் கேட்டபோது, அச்செய்தியை அடியோடு மறுத்தவர் ‘‘நான் ‘அரண்மனை’ படத்தை பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் இயக்குனர் என்னிடம் என்ன கதை சொன்னாரோ அது அப்படியே இருக்கிறது. எந்த காட்சிகளும் நீக்கப்படவில்லை. இது குறித்து எனக்கும் இயக்குனருக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடோ, பிரச்சனையோ இல்லை’’ என்று திட்டவட்டமாக மறுத்தார். ‘அரேபியக் குதிரை’ ராய் லட்சுமி அதர்வாவுடன் நடித்துள்ள ‘இரும்புக் குதிரை’ இந்த வாரம் வெளியாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;