’அசால்ட் சேது’ அசரடித்த 25வது நாள்!

’அசால்ட் சேது’ அசரடித்த 25வது நாள்!

செய்திகள் 26-Aug-2014 10:50 AM IST Chandru கருத்துக்கள்

‘பீட்சா’வில் பீதியைக் கிளப்பிய கார்த்திக் சுப்பராஜ், ‘ஜிகர்தண்டா’வில் ஜில்லிட வைத்தார். இந்த மாதம் 1ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ‘ஏ’ சென்டர் ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படம் வெளியாகி நேற்றோடு 25வது நாளைக் கடந்துள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘குரூப் கம்பெனி’. 25 வாரம் ஓடினால்தான் ‘சக்சஸ்’ என்ற ஃபார்முலாவெல்லாம் இப்போதைய சினிமாவிற்கு செல்லுபடியாகாது. படம் வெளியாகி 25 நாட்கள் வெற்றிகரமாக ஓடினாலே பெரிய விஷயம்தான்.

இப்படத்தின் வெற்றியில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் இரண்டு பேர். ஒருவர் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இவரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பட்டையைக் கிளப்பியது. சமீபத்தில் ‘ஜிகர்தண்டா’ படத்தின் பின்னணி இசையை மட்டும் தனியாக வெளியிட்டுள்ளார்கள். இன்னொருவர் ‘அசால்ட் சேது’வாக மிரட்டிய பாபி சிம்ஹா. படத்தின் நாயகன் சித்தார்த் தான் என்றாலும், பேரைத் தட்டிச் சென்றது என்னவோ இந்த ‘அ.குமார்’தான். ஒரு சில விமர்சனங்கள் ‘ஜிகர்தண்டா’விற்கு எதிராக இருந்தாலும்கூட, இந்த இருவரையும் பற்றி யாருமே குறைகூறவில்லை. அந்த அளவுக்கு படத்தை தூக்கி நிறுத்தியிருந்தார்கள். இப்படம் கண்டிப்பாக 50 நாளையும் சந்திக்கும் என ‘ஜிகர்தண்டா’ டீம் நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;