ஆர்யாவின் கூச்சத்தை போக்கிய இயக்குனர்!

ஆர்யாவின் கூச்சத்தை போக்கிய இயக்குனர்!

செய்திகள் 26-Aug-2014 10:41 AM IST Inian கருத்துக்கள்

இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி கதாநாயகனாக அறிமுகமாகிய ‘நான்’ வெற்றிப் படத்தை இயக்கியவர் ஜீவாசங்கர். மறைந்த ஒளிப்பதிவாளர் ஜீவாவிடம் உதவியாளராக இருந்த இவரின் அடுத்த படம் ‘அமரகாவியம்’. ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மியா ஜார்ஜ் நடிக்கிறார். இப்படம் குறித்து ஜீவாசங்கர் கூறியதாவது,

‘‘நான் இயக்க விரும்பிய முதல் படம் ‘அமரகாவியம்’ தான். பல தயாரிப்பாளர்களிடம் இந்த கதையை நான் சொன்னபோது அனைவருக்கும் கதை பிடித்தது. ஆனால் பட்ஜெட் விஷயத்தில் முரண்பட்டனர். இந்தக் கதை பட்ஜெட் விஷயத்தால் சிதைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே முதல் படமாக ‘நான்’ படத்தை இயக்கினேன். எனது குருநாதர் ஜீவா இயக்கிய ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் ஆர்யா நடித்தபோது கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். ஆர்யாவின் கூச்ச சுபாவத்தை போக்குவதற்காக நான் அவருக்கு பயிற்சி கொடுத்தேன். இப்போது இருக்கும் ஆர்யாவை பார்த்தால் யாரும் நான் சொல்வதை நம்ப மாட்டார்கள். இந்தப் படத்தில் தான் எங்களின் ஆழமான நட்பு ஆரம்பமானது. ஒரு சமயத்தில் எதேச்சையாக இந்தக் கதையை ஆர்யா கேட்டார். இரண்டரை மணி நேரம் பொறுமையாக கேட்டவர், ‘இதை நானே தயாரிக்கிறேன். பட்ஜெட் விஷயத்தில் எந்த காம்ப்ரமைஸும் செய்ய வேண்டாம்’ என்றார். நயன்தாரா உட்பட படம் பார்த்த எல்லோருக்குமே படம் பிடித்துள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. இப்படம் சத்யாவிற்கு சிறந்த ஒரு படமாக இருக்கும். அவர் இந்தப் படத்தின் மூலம் முக்கியமான கதாநாயகானக வருவார்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;