முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம்!

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் படம்!

செய்திகள் 26-Aug-2014 10:32 AM IST VRC கருத்துக்கள்

நெடுஞ்சாலை அருகே உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் நான்கு பேர் கடந்த கால சிந்தனையும் வருங்காலம் பற்றிய யோசனையும் இல்லாமல் நிகழ்காலம் சந்தோஷமாக வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கல்லூரி மாணவர்கள் என்றால் அவர்களுக்குள் கருத்து மோதல்கள், சண்டைகள் நடக்கத்தான் செய்யும். அதை அவர்களே சரிசெய்து கொள்வார்கள். ஆனால் கல்லூரியின் அருகில் உள்ள கிராமத்தின் முக்கிய புள்ளி ஒருவன் கல்லூரி பிரச்சனைகளை பெரிதாக்கி அதன் மூலம் அரசியலில் தன்னை வளர்த்துக் கொள்ள நினைக்கிறான். அதிலிருந்து அந்த கல்லூரி மாணவர்கள் மீண்டார்களா? இல்லையா என்பதை சொல்லும் படம் ‘விடியும் வரை விண்மீன்களாவோம்’.

பி.விஜயகுமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குவதோடு படத்தின் நான்கு கதாநாயகர்களில் ஒருவராகவும் நடிக்கிறார். மற்ற கதாநாயகர்களாக ஜெயகாந்தன், சந்துரு, சிவபெருமான் ஆகியோர் நடிக்க, கதாநாயகிகளாக நேகா, ஹென்னா ஆகியோர் நடிக்கிறார்கள். பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பவன் இசை அமைக்கிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் காமெடி, திகில் கலந்த படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிமுருகன் - டிரைலர்


;