லண்டன் டு சென்னை... புது பிளானில் ‘கத்தி’!

லண்டன் டு சென்னை... புது பிளானில் ‘கத்தி’!

செய்திகள் 26-Aug-2014 10:11 AM IST Chandru கருத்துக்கள்

தீபாவளிக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், பரபரப்பில் பம்பரமாக சுற்றிக் கொண்டிருக்கிறது ‘கத்தி’யைப் பற்றிய எதிர்பார்ப்பு? அனிருத்தின் இசையில் பாடல்கள் அமர்களமாக தயாராகிவிட்டதாம். இன்னும் விஜய் பாடும் பாடல் மட்டுமே ரெக்கார்டு செய்ய வேண்டியிருக்கிறதாம். அதையும் இந்த வாரத்தில் கண்டிப்பாக முடித்துவிடுவார்களாம். இதனால் ‘கத்தி’ இசை ஆல்பத்தை வரும் செப்டம்பர் 18ல் ரிலீஸ் செய்தே தீருவது என்ற உறுதியில் இருக்கிறதாம் இப்பட தயாரிப்பு நிறுவனம். ஆரம்பத்தில் ‘கத்தி’ ஆடியோ விழாவை லண்டனில் வைத்து பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தற்போது சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இவ்விழா மேடையில் விஜய் பாடுவார் என்றும் கூறுகிறார்கள். அதோடு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரையும் அழைத்து வரவும் ஏற்பாடுகள் நடக்கிறதாம்.

‘ஐ யம்... வெயிட்டிங்’னு ஒவ்வொரு ‘இளையதளபதி’ ரசிகரும் ஆவலோடு ‘கத்தி’ ஆல்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;