காந்தி ஜெயந்தியன்று எஸ்.ஜே.சூர்யாவின் இசை!

காந்தி ஜெயந்தியன்று எஸ்.ஜே.சூர்யாவின் இசை!

செய்திகள் 25-Aug-2014 5:25 PM IST VRC கருத்துக்கள்

எஸ்.ஜே.சூர்யா நடித்து, இயக்கியுள்ள மியூசிக்கல் திரைப்படம் ‘இசை’. இந்தப் படத்தின் மூலம் இசை அமைப்பாளராகவும் அறிமுகமாகவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் புதுமுகம் சாவித்திரி ஜோடியாக நடித்திருக்க, சத்யராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் டிரைலர் வருகிற விநாயக சதுர்த்தியன்று (29-8-14) வெளியாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து படத்தின் பாடல்களை செப்டம்பர் மாதம் வெளியிட்டு, படத்தை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தியன்று) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தை ஏ.எஸ்.ஏ. மல்டி மீடியா நிறுவனம் சார்பில் விக்டர் ராஜ் பாண்டியன் தயாரித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;