வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய கேப்டன்!

வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய கேப்டன்!

செய்திகள் 25-Aug-2014 2:39 PM IST VRC கருத்துக்கள்

நடிகரும், தே.மு.தி.க.கட்சியின் தலைவருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் தனது 63-ஆவது பிறந்த நாளை தனது வீட்டில் ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் இன்று உற்சாகமாக கொண்டாடினார். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து உற்சாகமாக இருந்த விஜயகாந்துக்கு ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் ஆளுயர ரோஜா மாலை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ரசிகர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் விஜயகாந்த் இனிப்புகள் வழங்கினார். அப்போது விஜயகாந்துடன் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் சண்முகபாண்டி, பிரபாகரன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோரும் இருந்தனர். விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகரக்ளும், கட்சி தொண்டர்களும் ஏழை எளியோருக்கு நிறைய நல உதவிகளை செய்துள்ளனர். ஏராளமான அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் விஜயகாந்துக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விருத்தாச்சலம் - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;