துவங்கியது விக்ரம்பிரபு – விஜய் படம்!

துவங்கியது விக்ரம்பிரபு – விஜய் படம்!

செய்திகள் 25-Aug-2014 2:35 PM IST VRC கருத்துக்கள்

வளர்ந்துவரும் இளம் கதாநாயகர்களில் வேகமாக முன்னேறி வருபவர் விக்ரம்பிரபு. கௌரவ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார் இணைந்து நடித்து விரைவில் வெளிவரவுள்ள படம் ‘சிகரம் தொடு’. இப்படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு, விஜய் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ராதிகா சரத்குமாரும், லிஸ்டின் ஸ்டீஃபனும் இணைந்து தயாரிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக முன்னாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இவரை தவிர பெங்களூரை சேர்ந்த் காவ்யா ஷெட்டியும் இப்படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே மலையாள ரீ-மேக் படங்களான ‘சென்னையில் ஒரு நாள்’, ‘புலிவால்’ போன்ற படங்களின் தயாரிப்பில் இணைந்த ராதிகா சரத்குமாரும், லிஸ்டின் ஸ்டீஃபனும் இணைந்து தயாரிக்கும் இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தின் ரீ-மேக் என்று பரவலாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;