ரீ-மேக் ஆகும் சிகப்பு ரோஜாக்கள்!

ரீ-மேக் ஆகும் சிகப்பு ரோஜாக்கள்!

செய்திகள் 25-Aug-2014 11:42 AM IST VRC கருத்துக்கள்

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கே.பாக்யராஜ் முதலானோர் நடித்து 1978-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. ஏற்கெனவே ஹிட்டான சில படங்கள் மீண்டும் ரீ-மேக் செய்து வரும் நிலையில் பாரதிராஜாவின் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தையும் ரீ-மேக் செய்யவிருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இப்போது ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம் ரீ-மேக் ஆவது உறுதியாகிவிட்டது. இதனை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதியே இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகவிருக்கும் மனோஜ் பாரதி, பாரதிராஜா, மணிரத்னம் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான மனோஜ் பாரதி, தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இப்போது ‘வாய்மை’, ‘13’, ’கதிர்வேல் காக்க’ ஆகிய படங்களில் நடித்து வரும் மனோஜ் பாரதி, இப்படங்களை முடித்ததும், ‘சிகப்பு ரோஜாக்கள்’ ரீ-மேக்கை இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு ‘சிவப்பு ரோஜா’ என்று பெயர் வைத்துள்ளார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறாராம்! இப்படத்தில் பாரதிராஜாவும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;