பார்த்திபனால் இழுத்து மூடப்பட்ட தியேட்டர்!

பார்த்திபனால் இழுத்து மூடப்பட்ட தியேட்டர்!

செய்திகள் 25-Aug-2014 11:33 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’. பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் திருட்டு விசிடிக்கள் சென்னை பர்மா பஜாரில் விற்கப்படுவதாக பார்த்திபனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனது உதவியாளர்களுடன் நேரில் சென்ற அவர் திருட்டுத்தனமாக விசிடி விற்றவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் அந்த விசிடி, கோவை மாவட்டத்தில், அன்னூர் என்ற ஊரில் உள்ள அஷ்டலட்சுமி தியேட்டரில் தயாரிக்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து அந்த தியேட்டர் சம்பந்தபட்டவர்களை போலீஸார் கைது செய்ததுடன் தியேட்டர் 2 வருடங்களுக்கு இயங்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாஸ்கர் ஒரு ராஸ்கல் - teesar


;