‘சுவடுகள்’ இயக்குனரின் அடுத்த படம்!

‘சுவடுகள்’ இயக்குனரின் அடுத்த படம்!

செய்திகள் 25-Aug-2014 11:03 AM IST VRC கருத்துக்கள்

‘சுவடுகள்’ எனும் படத்தை இயக்கி, தயரித்து, ஹீரோவாகவும் நடித்த அமெரிக்க வாழ் தமிழர் ஜெய்பாலா மீண்டும் ஒரு படத்தை இயக்கி, தயாரித்து, நடிக்கவிருக்கிறார். இது திகில் படமாம்! ‘சுவடுகள்’ படம் அமெரிக்க வாழ் தமிழர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாம். இதைத் தொடர்ந்து அவர்கள் இவரை மீண்டும் படம் இயக்க சொல்லி, உற்சாகப்படுத்தவே, அடுத்து ஒரு திகில் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் ஜெய்பாலா! இவர் அமெரிக்காவில் திரைப்பட இயக்கம் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘பாலா புரொடக்‌ஷன்ஸ்’ எனும் நிறுவனம் சார்பில் உருவாக இருக்கும் இந்த திகில் படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் துவங்கவிருக்கிறதாம். இது பேய் மற்றும் அமானுஷ்யங்கள் இல்லாத வித்தியாசமான ஒரு படமாக இருக்கும் என்கிறர் ஜெய்பாலா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;