மீண்டும் விஜய் - பிரபுதேவா... ‘போக்கிரி’ டீம் ரிட்டர்ன்!

மீண்டும் விஜய் - பிரபுதேவா... ‘போக்கிரி’ டீம் ரிட்டர்ன்!

செய்திகள் 25-Aug-2014 10:59 AM IST Chandru கருத்துக்கள்

2007ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடமாட்டார்கள் ‘இளையதளபதி’ ரசிகர்கள். தங்களின் ஆதர்ச நாயகன் விஜய்க்கு, இயக்குனர் பிரபுதேவா சூப்பர்ஹிட் கொடுத்த ‘போக்கிரி’ பொங்கலல்லவா அது! அதுவும் அஜித்தின் ‘ஆழ்வார்’ படத்துடன் ரிலீஸாகி சூப்பர்ஹிட் ஆனதில் கூடுதல் சந்தோஷம் அவர்களுக்கு. இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை மீண்டும் ஹீரோவாக வைத்து 2009ல் ‘வில்லு’ படத்தை இயக்கினார் பிரபுதேவா. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன்பிறகு பிரபுதேவாவின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த ‘எங்கேயும் காதல்’, 'வெடி' படங்களோடு, ஹிந்தியில் பிஸியாகிவிட்டார் பிரபுதேவா. தற்போது ‘ஆக்ஷன் ஜாக்சன்’, ‘சிங் இஸ் பிலிங்’ ஆகிய ஹிந்திப் படங்களை இயக்கி வருகிறார். இப்படங்களை முடித்துவிட்டு மீண்டும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பிரபுதேவா இருப்பதாகவும், அப்படி தமிழுக்கு அவர் வரும் பட்சத்தில் தனது ஆஸ்தான ஹீரோ விஜய்யை வைத்துதான் படம் இயக்குவார் என்றும் அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து சிம்பு தேவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதனையடுத்து, பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்றும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;