மு.களஞ்சியம் உயிர் காக்க உதவுவாரா அஞ்சலி?

மு.களஞ்சியம் உயிர் காக்க உதவுவாரா அஞ்சலி?

செய்திகள் 25-Aug-2014 9:52 AM IST Chandru கருத்துக்கள்

இயக்குனர் மு.களஞ்சியம் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி ஓங்கோல் என்ற இடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் ஓங்கோலிலிருந்து திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இயக்குனர் களஞ்சியும் உடம்பு முழுவதும் பலத்த அடிபட்டிருப்பதால் அவரால் முழுமையாக எதையும் உணர முடியவில்லையாம். யாரைப் பார்த்தாலும் முதலில் அவர்கள் அணிந்திருக்கும் உடையின் நிறம் மட்டுமே மனதில் நிலைப்பதாகவும், மற்றபடி யார் என்ன என்பது பற்றிய உணர்வு ஏற்படுத்தவில்லை, அவ்வப்போது மட்டுமே கண் விழிக்கிறார் என்றும் அவருக்கு நெருங்கியவர்கள் கூறுகிறார்கள்.

இன்னும் எவ்வளவு காலம் சிகிச்சையில் இருப்பார் என்பது தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள். அஞ்சலி நடித்த ‘ஊர் சுற்றிப் புராணம்’ படம் வேறு பாதியில் நிற்கிறது. சிகிச்சைக்காக யாரிடம் போய் உதவி கேட்டாலும் ஏற்கெனவே படத்திற்காக கொடுத்த பணம் என்ன ஆச்சு? என்று உதவ மறுக்கிறார்களாம். அதுமட்டும் இல்லாமல் களஞ்சியத்தின் உடல் நிலையை காரணம் காட்டி சிலர் கடனைக் கேட்டும் நெருக்கடி கொடுக்கிறார்களாம். ‘‘இந்த இக்கட்டான சூழ்நிலையை மனதில் வைத்து, அஞ்சலி பணத்தை திருப்பி கொடுத்தால் களஞ்சியத்தின் உயிர் காக்க முடியும். இதற்கான நடவடிக்கையில் திரைப்பட சங்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு உயிர் இழப்புக்கு காரணமாக வேண்டும்’’ என்று மு.களஞ்சியத்துக்கு வேண்டிய நண்பர்கள் ஆதங்கத்துடன் சொல்லியிருப்பதாக பி.ஆர்.ஓ. மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறைவி - மனிதி ப்ரோமோ வீடியோ


;