கமலின் ‘பாபநாசம்’ படத்திற்கு தடையா?

கமலின் ‘பாபநாசம்’ படத்திற்கு தடையா?

செய்திகள் 25-Aug-2014 9:32 AM IST Chandru கருத்துக்கள்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘திருசியம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்க இருக்கிறார். கமலுக்கு ஜோடியாக கௌதமி நடிக்கும் இப்படத்திற்கு ‘பாபநாசம்’ என்று சமீபத்தில் பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில், ‘திருசியம்’ படத்தின் கதை, தான் எழுதிய ‘ஒரு மழைக் காலத்து...’ என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எனவே அப்படத்தின் ரீமேக் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என எர்ணாகுளம் கோர்ட்டில் வழக்கு ஒன்றை சில வாரங்களுக்கு முன்பு பதிவு சதீஷ்பால் என்பவர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு மாத கால அவகாசம் எடுத்துக்கொண்டு, ‘ஒரு மழைக் காலத்து’ நாவலைப் படித்து, ‘திருசியம்’ படத்தையும் பார்த்த பின்னர், கடந்த சனிக்கிழமை (23-8-2014) அன்று, ‘‘இரண்டுக்கும் ஒற்றுமை உள்ளது என்றுகூறி, இப்படத்தை ரீமேக் செய்வதற்கு நீதிமன்றத்தில் 10 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கிறார்களா அல்லது 10 லட்ச ரூபாய் அபராதம் செலுத்திவிட்டு ‘பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்பை நடத்தவிருக்கிறார்களா என்பது குறித்து கமல் தரப்பிலிருந்தோ, ஜீத்து ஜோசப் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வந்ததாக தெரியவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;