8 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘காந்தி’ பட இயக்குனர் மரணம்!

8 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘காந்தி’ பட இயக்குனர் மரணம்!

செய்திகள் 25-Aug-2014 9:25 AM IST Chandru கருத்துக்கள்

1982ல் ஹாலிவுட்டில் வெளிவந்து, அந்த வருடத்தின் சிறந்த படம் உட்பட 8 ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் ‘காந்தி’. இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தியின் வாழ்க்கை முறையை படமாக இயக்கிய ரிச்சர்ட் அட்டென்போரோ நேற்று (24-8-2014) உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த 90 வயது ரிச்சர்ட் அட்டென்போரோ ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் பார்க்கின் ஓனராக நடித்து புகழ்பெற்றவர். சுமார் 60 வருடங்கள் திரையுலகில் கோலோச்சிய இவர், இந்தியாவின் ‘பத்மபூஷன்’, பிரிட்டனின் ‘லார்ட்’ போன்ற விருதுகளைப் பெற்று கௌரவம் அடைந்திருக்கிறார்.

மகாத்மா காந்தியின் புகழ் உலகம் முழுக்க சென்று சேர்ந்ததில் ரிச்சர்டு அட்டென்போரோவின் பங்கும் அடக்கம். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தலைவன் வருகின்றான் - விஷால் அந்தம் மேக்கிங் வீடியோ


;