செப்டம் 5ல் அடுத்த வெற்றிக்குத் தயாராகும் கிருஷ்ணா!

செப்டம் 5ல் அடுத்த வெற்றிக்குத் தயாராகும் கிருஷ்ணா!

செய்திகள் 23-Aug-2014 5:54 PM IST VRC கருத்துக்கள்

கிருஷ்ணா, விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த், மோனல் கஜார், நிகாரிகா கரீர் முதலானோர் இணைந்து நடித்துள்ள படம் ‘வானவராயன் வல்லவராயன்’. ராஜமோகன் இயக்கியுள்ள இப்படத்தை ஜீரோ ரூல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மாகாபா ஆனந்த் கதாநாயகனாக நடித்து அறிமுகமாகவிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். கிருஷ்ணா நடித்து சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘யாமிருக்க பயமே’ படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் இப்படம் அடுத்த மாதம் 5-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. அத்துடன் விஜய் டிவியிலிருந்து வந்து வெற்றிபெற்ற சிவகார்த்திகேயன் வரிசையில் மாகாபா ஆனந்த் நடித்து அறிமுகமாகும் படம் இது என்பதால் இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் - டிரைலர்


;