கேரளாவில் கலக்கி வரும் அஞ்சான்!

கேரளாவில் கலக்கி வரும் அஞ்சான்!

செய்திகள் 23-Aug-2014 4:56 PM IST VRC கருத்துக்கள்

கடந்த 15-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சூர்யாவின் ‘அஞ்சான்’. இந்தப் படம் தமிழகத்தை போலவே கேரளாவிலும் பெரும் எதிர்பார்ப்புடன் அங்குள்ள 100 தியேட்டர்களில் வெளியானது. இப்படம் வெளியாகி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் அத்தனை தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படம் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் சமீபத்தில் சுரேஷ் கோபி நடித்த மலையாள படம் ஒன்றும், மம்முட்டி நடித்த மலையாள படம் ஒன்றும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, அதனுடன் ‘அஞ்சான்’ படமும் இரண்டாவது வாரத்தில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதுதான். கேரளாவின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை அடுத்த மாதம் முதல் வாரம் கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு அங்குள்ள முன்னணி நடிகர்களின் பல படங்கள் ரிலீசாகவிருக்கிற நிலையிலும் ‘அஞ்சான்’ தொடர்ந்து நல்ல வசூலுடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ‘அஞ்சான்’ படக் குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடுகு - டீசர்


;