பழங்குடி இன மாணவிக்கு கல்வி உதவி செய்த சூர்யா!

பழங்குடி இன மாணவிக்கு கல்வி உதவி செய்த சூர்யா!

செய்திகள் 23-Aug-2014 4:24 PM IST VRC கருத்துக்கள்

கொடைக்கானல் அருகே ஒரு மலை கிராமத்தில் உள்ள சின்னவன் என்பவரின் மகள் ரேவதி. இவர் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் பிளஸ் 2 வரை படித்து 734 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர்தான் கொடைக்கானல் பளியர் பழங்குடியின மலை கிராமத்தில் முதல் முறையாக பிளஸ் 2 முடித்தவர். இவர் தொடர்ந்து கல்லூரியில் படிக்க ஆசைப்பட்டாலும், அவருக்கு அதற்கான வசதி இல்லாததை ஒரு தினசரி பத்திரிகை செய்தி மூலம் அறிந்துகொண்ட நடிகர் சூர்யா, தனது ‘அகரம் பவுண்டேஷன்’ நிறுவனம் மூலம் அந்த மாணவியின் முழு கல்வி செலவையும் ஏற்றுக்கொள்வதாக கூறி, அந்த மாணவியை சென்னைக்கு அழைத்து சென்னை அப்போலோ கல்லூரியில் பி.சி.ஏ.படிப்பில் சேர்த்துள்ளார். பி.சி.ஏ. படிப்பை முடித்ததும் சி.ஏ.படிக்க நினைக்கும் ரேவதி, இப்போது சூர்யாவின் ‘அகரம் பவுண்டேஷன்’ உதவியால் அந்தக் கல்லூரியில் மகிழ்ச்சியுடன் படித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கத்தி டிரைலர்


;