கத்தி போஸ்டர்: எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்!

கத்தி போஸ்டர்: எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்!

செய்திகள் 23-Aug-2014 12:09 PM IST Chandru கருத்துக்கள்

கடந்த சில வாரங்களாகவே மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டு வருவது ‘கத்தி’ படம் குறித்துதான். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் தொடர்பு இருப்பதாகக்கூறி சில ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் இப்படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கின. ஒரு சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் சீமானும் இதுகுறித்து ‘‘நான் லைகா நிறுவனத்தை எதிர்க்கிறேன். ஆனால் ‘கத்தி’ படத்திற்கு என் ஆதரவு உண்டு’’ என கருத்துத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கி வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு ஓரிரு நாட்களாக நிலவி வந்தது.

அதைத் தொடர்ந்து, ‘கத்தி’ படம் பற்றிய முக்கிய அறிவிப்பும், புதிய போஸ்டர்களும் நேற்று மாலை வெளிவரும் என தகவல்கள் வெளியாகி வந்தன. சொன்னபடி ‘கத்தி’ படத்தின் புதிய போஸ்டர்களும் வெளிவந்தன. ஆனால் எதிர்பார்த்தபடி புதிய நிறுவனத்தின் லோகோ உடன் கூடிய போஸ்டர்கள் வெளிவராமல் அதே ‘லைகா புரொடெக்ஷன்ஸ்’ லோகோவுடனே வெளிவந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு, புதிய ஸ்டில்லுடன் புது மாதிரியான டிசைனில் போஸ்டர்கள் வரும் எனவும் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருந்தனர். ஆனால், ஏற்கெனவே வெளிவந்த பழைய ஸ்டில்லுடன் போஸ்டர்கள் வந்ததும் கூடுதல் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இதுகுறித்த விசாரித்தபோது, ‘கத்தி’ படத்தின் புதிய ஸ்டில்களுடன் கூடிய போஸ்டர்கள் இசை வெளியீட்டிற்கு முன்புதான் வெளிவரும் என்று தகவல்கள் கிடைத்தன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;