விஸ்வரூபம்-2 வா? உத்தம வில்லனா?

விஸ்வரூபம்-2 வா? உத்தம வில்லனா?

செய்திகள் 23-Aug-2014 11:34 AM IST VRC கருத்துக்கள்

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. காரணம், கமலின் ‘விஸ்வரூபடம் 2’ படத்தில் நிறைய கிராஃபிக்ஸ் பணிகள் முடிக்க வேண்டி இருப்பதாகவும், அதற்கு கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதனால் ‘விஸ்வரூபடம் 2’ படத்திற்கு முன்னதாக, ‘உத்தம வில்லன்’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம். ‘உத்தம வில்லன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, கமல் தான் சம்பந்தப்பட்ட டப்பிங் வேலைகளையும் முடிந்துவிட்டு, அடுத்து ‘திருசியம் படத்தின் ரீ-மேக்கான ‘பாபநாசம்’ படத்தில் நடிக்க தயாராகி விட்டார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் திருநெல்வேலி சுற்று வட்டாரங்களில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;