ஆர்யா படம் பார்த்து கண்ணீர் சிந்திய நயன்தாரா!

ஆர்யா படம் பார்த்து கண்ணீர் சிந்திய நயன்தாரா!

செய்திகள் 23-Aug-2014 11:14 AM IST VRC கருத்துக்கள்

நடிகர் ஆர்யா, தனது தம்பி சத்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து தயாரித்திருக்கும் படம் ‘அமரகாவியம்’. விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தை ஆர்யா தனது நெருங்கிய நணபர்களுக்கு சமீபத்தில் போட்டு காட்டியுள்ளார். ‘அமரகாவியம்’ படத்தை பார்க்க வந்தவர்களில் ஆர்யாவின் நெருங்கிய தோழி நயன்தாராவும் ஒருவர்! ‘அமரகாவியம்’ படத்தை பார்த்து நயன்தாரா ரொம்பவும் ஃபீல் பண்ணினாராம். படத்தை பார்த்து முடித்ததும், அதில் இடம்பெற்ற சில காட்சிகள் அவரை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றதாகச் சொல்லி கண் கலங்கியுள்ளார்! அத்துடன் படம் பார்த்து, ஒரு வார காலம் கழித்து படத்தின் இயக்குனர் ஜீவா ஷங்கரை தொடர்பு கொண்டு, ‘‘படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் இன்னும் என் மனதில் இருந்து போகவேயில்லை. என்னை ரொம்பவும் ஃபீல் பண்ண வைத்த ஒரு படம் ‘அமரகாவியம், கன்கிராட்ஸ்’’ என்று இயக்குனருக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார் நயன்தாரா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொல்லிவிடவா - டீசர்


;