18 வயதுக்கு குறைவான பெண்கள் நடிக்க தடையா?

18 வயதுக்கு குறைவான பெண்கள் நடிக்க தடையா?

செய்திகள் 23-Aug-2014 10:25 AM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் 18 வயதுக்கு குறைவான பெண்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநில செயலாளர் எல்.முத்துச்செல்வி பொது நலமனு என்றை அளித்திருந்தார். அதில்18 வயதுக்கு குறைவானவர்கள் பெரிய பெண்ணாக நடிக்க தொடங்கி விட்டனர். சில சிறுமிகளுக்கு கால்ஷீட் தரப்பட்டு அவர்கள் கதாநாயகியாக நடிக்கின்றனர். அவர்கள் பெரியவர்கள் போல நடிக்க வற்புறுத்தப்படுகிறார்கள். இது அந்த சிறுமியின் சகஜ நிலையை பெரிதும் பாதிக்கிறது. அவர்கள் மைனர் என்ற நிலையில் இருப்பதால் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுடன் அவர்கள் ஒப்பந்தங்கள் செய்ய முடியாது. வளர் இளம் பருவத்தில்தான் மனநிலை மற்றும் உடல்நிலையைல் பல மாற்றங்கள் ஏற்படும். இது போன்ற நடிகைகளில் லட்சுமி மேனன், துளசி, சந்தியா, கார்த்திகா ஆகியோர் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டபோது அவர்களுக்கு 18 வயது நிறைவடையவில்லை. இது தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு 18 வயதுக்கு குறைவான பெண்கள் நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலமை நீதிபதிகள், ‘‘சமுதாயத்தில் ஒரு விஷயத்தில் பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் உண்டு! மனுதாரர் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து! ஆனால் நடிப்பதில் தடை செய்வதற்கு சட்ட ரீதியான தடை எதுவும் இல்லாததனால் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;