திருட்டு விசிடி: பார்த்திபன் திடீர் ஆக்ஷன்!

திருட்டு விசிடி: பார்த்திபன் திடீர் ஆக்ஷன்!

செய்திகள் 23-Aug-2014 9:28 AM IST Chandru கருத்துக்கள்

சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் வெளியாகி ரசிகர்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இப்படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய இயக்குனர் பார்த்திபன், திருட்டு விசிடி விற்பவர்களுக்கு எதிராக நானே நேரடியாக களமிறங்கப் போகிறேன் என அறிவித்திருந்தார்.

சொன்னபடியே இயக்குனர் பார்த்திபன் நேற்று மாலை சென்னை பாரிமுனை பர்மா பஜார் பகுதிக்கு சென்றாராம். அங்கு, தனக்கு வேண்டப்பட்ட ஒருசிலரை சிடி விற்கும் கடைகளுக்கு அனுப்பி திருட்டு வி.சி.டி.க்கள் கிடைக்கிறதா? என சோதனை மேற்கொண்டாராம். அப்போது அங்கிருந்த 2 கடைகளில் ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ உள்பட பல்வேறு புதுப்படங்களின் திருட்டு வி.சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. உடனடியாக அந்த 2 கடைக்காரர்களையும் பிடித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர் என பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து இதுபோன்று திருட்டு வி.சி.டி.க்கள் விற்பனைக்கு எதிராக தான் செயல்படப்போவதாகவும் இயக்குனர் பார்த்திபன் அறிவித்துள்ளாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டு விசிடி கடைக்கு விசிட் அடித்த பார்த்திபன் - வீடியோ


;