நஸ்ரியாவுக்கு அடுத்து மணமகளாகும் நந்தனா!

நஸ்ரியாவுக்கு அடுத்து மணமகளாகும் நந்தனா!

செய்திகள் 22-Aug-2014 12:47 PM IST VRC கருத்துக்கள்

நஸ்ரியா நசீம் திருமணத்தை தொடர்ந்து மற்றுமொரு தமிழ் நடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் பெயர் நந்தனா! தமிழில் 'கிருஷ்ணவேணி பஞ்சாலை, ‘ உயிருக்கு உயிராக’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த இவர், அந்தப் படங்களுக்குப் பின் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இப்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. நந்தனாவை மணக்கப் போகிறவரின் பெயர் ஹரி. சாஃப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் இவர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். நந்தனா-ஹரி திருமணம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 6-ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் நடக்கவிருக்கிறது! இது காதல் திருமணம் அல்ல; பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சமில்லை அச்சமில்லை - டீசர்


;