50-ஆவது நாளில் ‘அரிமாநம்பி’

50-ஆவது நாளில் ‘அரிமாநம்பி’

செய்திகள் 22-Aug-2014 10:53 AM IST Top 10 கருத்துக்கள்

விக்ரம் பிரபுவுக்கு தனது முதல் படமாக அமைந்த ‘கும்கி’ மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து அவரது நடிப்பில் வெளிவந்த ‘இவன் வேற மாதிரி’யும் வெற்றிப்படமாக அமைந்தது. சமீபத்தில் தான் விக்ரம் பிரபுவின் மூன்றாவது படமாக ‘அரிமா நம்பி’ ரிலீசானது. ஆனந்த் ஷங்கர் இயக்கிய இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, ‘ட்ரம்ஸ்’ சிவமணி இப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். ‘வி.கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சாரிபில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இப்படமும் வெற்றிப் படமாக அமைந்து, இன்று 50 ஆவது நாளை எட்டி தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சினிமாவில் இன்றைய சூழ்நிலையில் ஒரு நடிகருக்கு வரிசையாக வெற்றிப் படங்கள் அமைவது கடினம்! ஆனால் விக்ரம் பிரபுவுக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அவரது அடுத்து வரும் படங்களும் வெற்றிப் படங்களாக அமையட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;