சரத்குமார் ஒரு கொடூரமான வில்லன்!

சரத்குமார் ஒரு கொடூரமான வில்லன்!

செய்திகள் 22-Aug-2014 10:19 AM IST VRC கருத்துக்கள்

‘புலன்விசாரணை’ படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் சரத்குமார். அதன் பிறகு கதாநாயகனாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்தார். பல படங்களில் இரட்டைவேடமேற்று வெற்றிப்படங்களைக் கொடுத்தவர், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. கதாநாயகனாக மாறிய பின்பு முதன் முதலாக சரத்குமார் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். வில்லன் என்றால் சாதாரண வில்லனல்ல, மிகக் கொடூரமான ஈவு இரக்கமற்ற வில்லனாம்! ஒன்றுக்கொன்று உருவ ஒற்றுமை, அண்ணன், தம்பி, அப்பா, பிள்ளை போன்ற வழக்கமான இரைட்டை வேடங்களில் இல்லாமல் இருவேறு வித்தியாசமான வில்லன், கதாநாயகன் வேடங்களை ஏற்றிருக்கிறாராம். இது மட்டுமின்றி இப்படத்தில் அவர் கதாசிரியராகவும் அறிமுகமாகிறார்.

இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்ட படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்த படத்தில் சரத்குமாருடன் ஓவியா, மீராநந்தன் என இரு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இத்துடன் சமுத்திரக்கனி ஒரு பிரதான வேடத்தில் நடிக்கிறார்.விரைவில் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏமாளி - டீசர்


;