அஜித், சூர்யா, தனுஷ் வரிசையில் இடம் பிடிப்பாரா பரத்?

அஜித், சூர்யா, தனுஷ் வரிசையில் இடம் பிடிப்பாரா பரத்?

செய்திகள் 21-Aug-2014 11:48 AM IST Chandru கருத்துக்கள்

ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் 2003ஆம் ஆண்டு தமிழில் அறிமுகமானார் நடிகர் பரத். அதன்பிறகு ‘செல்லமே’ படத்தில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர, ‘காதல்’ தந்த வெற்றியால் பலராலும் பரவலாக பேசப்பட்டார் பரத். ஆரம்பம் அமர்களமாக அமைந்தாலும், அதன் பின்பு அவரின் சினிமா பயணம் அவ்வப்போது சறுக்கல்களையே சந்தித்தது. 2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிப்ரவரி 14’ படத்திலிருந்து கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த ‘555’ திரைப்படம் வரை ‘பட்டியல்’, ‘வெயில்’, ‘எம் மகன்’, ‘வானம்’ ஆகிய படங்கள் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெயரை சம்பாதித்துக் கொடுத்தன. இருந்தபோதிலும் அவர் எப்போதும் தளர்ந்ததில்லை. குறிப்பாக ‘555’ படத்திற்காக கடின உழைப்பைக் கொட்டி 6 பேக் பரத்தாக அவர் ‘மீண்டு’ வந்து நின்றபோது, கோடம்பாக்கமே அசந்து போனது. ஆனாலும் இப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.

இந்நிலையில் ஒரு கட்டாய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு முக்கியமான தருணத்தில் இருக்கிறார் பரத். ஆம்... இந்த வாரம் வெளியாகவிருக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ அவரின் 25வது படம். நடிகர்களைப் பொறுத்தவரை தங்களின் 25வது படத்தை வெற்றிப்படமாக கொடுக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆவலோடு இருப்பார்கள். அந்த வகையில் அஜித்திற்கு ‘அமர்களம்’, சூர்யாவிற்கு ‘சிங்கம்’, தனுஷுக்கு ‘வேலையில்லா பட்டதாரி’ என தங்களின் 25வது படத்தை வெற்றியாக்கி தங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்கள்.

இப்போது இது பரத்துக்கான நேரம்.... இவர்களின் வரிசையில் அவரும் இடம் பிடிக்க நமது ‘டாப் 10 சினிமா’ சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;