‘பூவே உனக்காக’ சங்கீதா ரீ-என்ட்ரி!

‘பூவே உனக்காக’ சங்கீதா ரீ-என்ட்ரி!

செய்திகள் 21-Aug-2014 11:17 AM IST VRC கருத்துக்கள்

விஜய்யுடன் ‘பூவே உனக்காக’, விஜயகாந்துடன் ‘அலெக்சாண்டர்’, ராஜ்கிரணுடன் ‘எல்லாமே என் ராசா தான்’ உட்பட பல தமிழ் படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் சங்கீதா. ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். சங்கீதாவுக்கு திருமணமாகி ஒரு சில ஆண்டுகளான நிலையில், அவர் மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரியாக இருக்கிறார். ஆனால் தமிழில் இல்லை; மலையாளத்தில்! கடந்த 1998-ஆம் ஆண்டில் மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனும், சங்கீதாவும் ஜோடியாக நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா’. இந்தப் படத்திற்கு தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்ததோடு, சங்கீதாவுக்கு கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது. இந்த படம் தான் தமிழில் தங்கர்பச்சான் இயக்கி நடித்த ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன் ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா’ படத்தில் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக நடித்த சங்கீதா, இப்போது அதே ஸ்ரீனிவாசனுடன் மீண்டும் ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்தப் படத்திற்கு பெயர் ‘நகரவாரிதி நடுவில் ஞான்’. இந்தப் படம் அனைவருக்குமான நல்ல ஒரு சமூக கருத்தை கூறும் படமாக உருவாக இருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குழம்பி - ஓ காபி பெண்ணே மேக்கிங் வீடியோ


;