‘ராஜா ராணி’ நிறுவனத்திடம் கைமாறுகிறதா ‘கத்தி’?

‘ராஜா ராணி’ நிறுவனத்திடம் கைமாறுகிறதா ‘கத்தி’?

செய்திகள் 21-Aug-2014 11:05 AM IST Chandru கருத்துக்கள்

நாளுக்கு நாள் ‘கத்தி’ படம் பற்றிய எதிர்பார்ப்பு ஒருபுறம் எகிறிக்கொண்டே இருக்க, அப்படம் குறித்த சர்ச்சைகளும் இன்னொரு புறம் வளர்ந்து கொண்டே செல்கிறது. ‘கத்தி’ படம் குறித்த தன்னுடைய நிலைப்பாட்டை நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து தெளிவுபடுத்தினார் இயக்குனர் சீமான். அப்போது அவர், ‘‘லைக்கா நிறுவனத்தை நான் எதிர்க்கிறேன், ஆனால் விஜய்யையும் ‘கத்தி’ படத்தையும் நான் ஏன் எதிர்க்க வேண்டும். ‘கத்தி’ படத்தில் என் இனத்திற்கு எதிரான காட்சிகள் இருந்தால் மட்டுமே அதை நான் எதிர்ப்பேன்’’ என்று கூறியிருந்தார்.

இப்போது, இப்பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக லைகா நிறுவனத்திடம் இருக்கும் ‘கத்தி’யை வேறொரு முன்னணி நிறுவனத்திற்கு கைமாற்றிவிடலாமா என யோசித்து வருகிறார்களாம் தயாரிப்பு தரப்பினர். இப்போதைக்கு ‘ராஜா ராணி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்திடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;