சென்ராயன் காதல் திருமணம்!

சென்ராயன் காதல் திருமணம்!

செய்திகள் 21-Aug-2014 10:08 AM IST Inian கருத்துக்கள்

தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ படத்தில் அறிமுகமாகி பைக் திருடனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் தனி அன்பை பெற்றவர் சென்ராயன்.அதை தொடர்ந்து இவர் ‘சிலம்பாட்டம்’, ‘ஆடுகளம்’, ‘மூடர்கூடம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களில் நடித்து வருபவர். இவர் பட்டதாரி பெண்ணான கயல்விழி என்பவரை காதலித்து வந்தவர், அவரையே மணமுடிக்கவுள்ளார். இரு வீட்டினரின் சம்மத்த்துடன் இம்மாதம் 31- ஆம் தேதி சென்ராயன் - கயல்விழியை திருமணம் செய்துகொள்கிறார். வத்தலகுண்டு பகுதியில் உள்ள சென்ராயப் பெருமாள் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த திருமணத்தில் கலையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொள்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பவர் பாண்டி - சூரக்காத்து பாடல் வீடியோ


;