‘அமரகாவியம்’ ரிலீஸ் தேதி ரெடி!

‘அமரகாவியம்’ ரிலீஸ் தேதி ரெடி!

செய்திகள் 21-Aug-2014 10:05 AM IST VRC கருத்துக்கள்

‘தி ஷோ பீப்பிள்’ நிறுவனம் சார்பில் நடிகர் ஆர்யா தயாரித்துள்ள படம் ‘அமரகாவியம்’. இந்தப் படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யா கதாநயகனாக நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மியா ஜார்ஜ் நடித்துள்ளார். ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ஹிட் ஆகியிருப்பதோடு, படத்தின் டிரைலருக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘‘இப்படம் ‘ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் நடந்திருக்கும் தவிரக்க முடியாத ஒரு சம்பவத்தை நினைவு கூறும்’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ஜீவா சங்கர். ஆர்யாவின் தயாரிப்பு, அவரது தம்பி ஹீரோவாக நடித்த படம் என்ற எதிர்பார்ப்புகளுடன் ‘அமரகாவியம்’ அடுத்த மாதம் 5-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;