‘புலிப்பார்வை’ பட சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படுகிறது!

‘புலிப்பார்வை’ பட சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படுகிறது!

செய்திகள் 20-Aug-2014 5:22 PM IST VRC கருத்துக்கள்

‘வேந்தர் மூவிஸ்’ தயாரிப்பில், பிரவீன் காந்த் இயக்கியுள்ள படம் ‘புலிப்பார்வை'. இப்படம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரகனின் மகன் பாலசந்திரன் மரணத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப்படுள்ளதாகவும், இப்படத்தில் சிறுவன் பாலச்சந்திரனை போராளியாக சித்தரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு இலங்கை தமிழர் ஆதரவு இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 65 தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து ‘புலிப்பார்வை’ படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டாக அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து படத்தின் இயக்குனர் பிரவீன் காந்த் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்து, ‘‘புலிப்பார்வை'யில் தமிழ் அமைப்புகள், மாணவர்கள் எதிர்க்கும் காட்சிகள் நீக்கப்பட்டு, வேறுவிதமான காட்சிகளை படம் பிடித்து இணைக்க தீர்மானித்துள்ளாம். இந்த வேலை முடிந்ததும் தமிழ் அமைப்புகளுக்கு படத்தை திரையிட்டு காண்பிப்போம். அவர்களின் ஆதரவோடு இப்படம் வெளியாகும்’’ என்று கூறியிருக்கிறார்.

அத்துடன் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட படத்தின் தயாரிப்பாளர் எஸ்.மதன் பேசும்போது, ‘‘மீண்டும் படப்பிடிப்பு நடத்தி தயாராகும் ‘புலிபார்வை’ படத்திற்கு தமிழ் அமைப்புகள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எவ்வளவு கோடி நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, படத்தை வெளியிட மாட்டோம். தமிழ் உணர்வாளர்களுக்கு நாங்களும் மதிப்பு கொடுப்பவர்கள் தான்’’ என்று கூறியுள்ளார். இதன் மூலம் 'புலிப்பார்வை' படத்தின் பிரச்சினை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;