விஜய்யின் ‘கத்தி’க்கு ஆதரவா? எதிர்ப்பா? - சீமான்

விஜய்யின் ‘கத்தி’க்கு ஆதரவா? எதிர்ப்பா? - சீமான்

செய்திகள் 20-Aug-2014 5:12 PM IST Chandru கருத்துக்கள்

கோலிவுட்டில் தற்போது அதிகம் பரபரப்பாக பேசப்படும் படங்கள் இரண்டுதான். ஒன்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கத்தி’... இன்னொன்று பிரவீன்காந்த் இயக்கத்தில் மதன், ‘விடுதலைப்புலி’களின் தலைவர் பிராபகரனாக நடிக்கும் ‘புலிப்பார்வை’. இந்த இரண்டு படங்கள் குறித்த தனது பார்வையை தெளிவுபடுத்துவதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று காலை பேசியுள்ளார் இயக்குனர் சீமான். அப்போது பேசிய அவர்,

‘‘இவ்வளவு நாட்கள் கழித்து, அதாவது கிட்டத்தட்ட பாதி படம் நிறைவடைந்துள்ள நிலையில் ‘கத்தி’ படம் குறித்து இத்தனை சர்ச்சைகள் ஏன் எழுந்தது என்று தெரியவில்லை. இதே ‘கத்தி’ படத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸிற்குப் பதிலாக வேறு யாராவது புதுமுகங்கள் பணியாற்றியிருந்தால் இத்தனை எதிர்ப்புகள் எழுந்திருக்குமா என்ற சந்தேகமும் வருகிறது. ‘லைக்கா’ நிறுவனத்தின் மீது உள்ள குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை நான் கண்டிப்பாக எதிர்க்கிறேன். அவர்களைக் கூப்பிட்டு முதலில் பேசுவோம். ஆனால், விஜய்யையும், முருகதாஸையும் நான் ஏன் எதிர்க்க வேண்டும்? ‘கத்தி’ படத்தில் என் இனத்திற்கு எதிரான காட்சிகள் இருந்தால் நானே எதிர்ப்பேன். இங்கே உங்களின் கோபம் லைக்கா நிறுவனத்தின் மீதா? இல்லை.... விஜய் மீதா?’’ என்று கேள்வி எழுப்பினார். அதோடு இன்னொரு படமான ‘புலிப்பார்வை’ குறித்து பேசும்போது,

‘‘புலிப்பார்வை படத்தை நான் ஏற்கெனவே பார்த்துவிட்டேன். அதில் ஆட்சேபம் தெரிவிக்கும் காட்சிகளை நீக்கச் சொல்லி அவர்களிடம் நான் சொல்லியிருக்கிறேன். மற்றபடி ‘புலிப்பார்வை’ படத்தை நான் ஆதரிப்பதாக எங்கேயும் சொன்னதில்லை!’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;