கார் விபத்தில் சிக்கிய இயக்குனர் மு.களஞ்சியம்!

கார் விபத்தில் சிக்கிய இயக்குனர் மு.களஞ்சியம்!

செய்திகள் 20-Aug-2014 4:23 PM IST Chandru கருத்துக்கள்

‘பூமணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் மு.களஞ்சியம். அதன் பிறகு ‘கிழக்கும் மேற்கும்’, ‘பூந்தோட்டம்’, ‘நிலவே முகம் காட்டு’, ‘மிட்டா மிராசு’, ‘கருங்காலி’ ஆகிய படங்களை இயக்கினார். இதில் ‘கருங்காலி’ படத்தில் நடிகை அஞ்சலியை நடிக்க வைத்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது தெருக்கூத்துக் கலைஞர்களின் வாழ்க்கை முறையை மையமாக வைத்து ‘ஊர் சுற்றிப் புராணம்’ எனும் படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தில் நடிப்பதற்கு முதலில் ஒப்பந்தமானவர் அஞ்சலி. பின்னர் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார்.

இந்நிலையில், நேற்று ஒரு திருமணத்திற்காக ஆந்திரா சென்றுவிட்டு திரும்பும் வழியில் ஓங்கல் என்ற இடத்தில் மு.களஞ்சியம் பயணம் செய்த கார் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறதாம். இதில் இக்காரில் பயணம் செய்த ஒருவர் மரணம் அடைந்துவிட்டதாகவும், களஞ்சியம் உட்பட காரில் பயணம் செய்த ஒருசிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. தற்போது, மருத்துவமனையில் இவர்களுக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;