திருமண சந்தோஷத்தில் நஸ்ரியா!

திருமண சந்தோஷத்தில் நஸ்ரியா!

செய்திகள் 20-Aug-2014 4:16 PM IST VRC கருத்துக்கள்

‘நேரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பெரும் புகழ் அடைந்து பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை நஸ்ரியா நசீம்! இவருக்கும் மலையாள சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஃபஹத் ஃபாசிலுக்கும் ஒரு சில மாதங்களுக்கு முன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது! பஹத் ஃபாசில் பிரபல இயக்குனர் ஃபாசிலின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த இவர்களது திருமணம் நாளை (21-8-14) கேரளாவில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. ஃபஹத் பாசிலும், நஸ்ரியா நசீமும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணம் இஸ்லாம் மத முறைப்படி நடைபெறவுள்ளது. திருவனந்தபுரம் கழக்கூட்டம் என்ற இடத்தில் இருக்கும் அல் சாஜ் கன்வென்ஷன் சென்டரில் பகல் 12 மணி அளவில் இவர்களது திருமணம் நடைபெறவிருக்கிறது. ஃபஹத் ஃபாசில், மலையாள சினிமாவிலும், நஸ்ரியா மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவிலும் பிரபலமானவர் என்பதால் இவர்களது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான தென்னிந்திய சினிமா பிரபலங்கள கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபஹத் ஃபாசிலும், நஸ்ரியா நசீமும் கணவன் - மனைவியாக நடித்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பெங்களூர் டேஸ்’. இந்தப் படத்தின் வெற்றி தந்த மகிழ்ச்சியோடு இப்போது நிஜ வாழ்க்கையிலும் கணவன் - மனைவியாக இணைய இருக்கும் ஃபஹத் ஃபாசில் – நஸ்ரியா நசீம் தம்பதியருக்கு ‘டாப் 10 சினிமா’வின் அட்வான்ஸ் திருமண நல் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;