போலீசுக்கு கார்களை வாங்கி கொடுத்த அஜய் தேவ்கன்!

போலீசுக்கு கார்களை வாங்கி கொடுத்த அஜய் தேவ்கன்!

செய்திகள் 20-Aug-2014 12:39 PM IST VRC கருத்துக்கள்

அஜய் தேவ்கன் நடிப்பில் சமீபத்தில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டாகியுள்ள ஹிந்திப் படம் ’சிங்கம் ரிட்டேன்ஸ்.’ ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுக்க வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்க, இந்த சந்தோஷத்தை கொண்டாடும் வகையில் படத்தின் ஹீரோ அஜய் தேவ்கன் மும்பை போலீஸ் துறைக்கு 2 டாடா சுமோ கார்களை வாங்கி, பரிசாக அளித்துள்ளார். மும்பை உள்த்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீலிடம் அந்த கார்களுக்கான சாவிகளை ஒப்படைத்துள்ளார் அஜய் தேவ்கன். அப்போது படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டியும் உடனிருந்தார். உள்த்துறை அமைச்சரிடம் சாவிகளை வழங்கி அஜய் தேவ்கன் பேசும்போது, ‘சிங்கம் ரிட்டேன்ஸ்’ படத்தின் படப்பிடிப்புக்கு மும்பை போலீசார் தந்த ஒத்துழைப்பும், சப்போர்ட்டும் என்னால் மறக்கவே முடியாது’’ என்று தனது நன்றியையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ஜாக்சன் - பஞ்சாபி மஸ்த் சாங் வீடியோ


;