தனுஷின் ஸ்டைலில் மிரண்டுபோன பாலிவுட்!

தனுஷின் ஸ்டைலில் மிரண்டுபோன பாலிவுட்!

செய்திகள் 20-Aug-2014 11:58 AM IST Chandru கருத்துக்கள்

தெற்கிலிருந்து வடக்கிற்குச் சென்று சாதிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், அதை தன் முதல் படமான ‘ரான்ஜ்னா’விலேயே செய்து காட்டினார் தனுஷ். தற்போது அமிதாப் பச்சனுடன் இணைந்து ‘ஷமிதாப்’பில் கலக்கிக் கொண்டிருக்கிறார் தமிழ்நாட்டின் ‘விஐபி’. மாற்றுத்திறனாளியாக இப்படத்தில் நடிக்கும் தனுஷ் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் செம ஸ்டைலிஷ் லுக் ஒன்றில் தோன்றி அசத்தியிருக்கிறார். சாதாரணமாக அதுவரை நடித்துவந்த தனுஷை அந்த கெட்அப்பில் பார்த்ததும் ‘ஷமிதாப்’ டீமே அசந்து போனதாம். கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசனுடன் தனுஷ் நடிக்கும் இப்படத்தை இயக்குவது பால்கி. இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்கு பி.ஸ்ரீராம் என படம் நம்மூருக்கு ரொம்பவே நெருக்கமாக உருவாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;