ரஜினியின் ‘லிங்கா’வில் சுதீப் நடிக்கிறாரா?

ரஜினியின் ‘லிங்கா’வில் சுதீப் நடிக்கிறாரா?

செய்திகள் 20-Aug-2014 11:52 AM IST VRC கருத்துக்கள்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடிக்க, வில்லனாக ஜெகபதி பாபு நடித்து வருகிறார். நம்பத்தகுந்த ஒரு லேட்டஸ்ட் தகவலின் படி இப்படத்தில் இன்னொரு வில்லன் கேரக்டர் உண்டு என்றும், அந்த கேரக்டரில் ‘நான் ஈ’ புகழ் சுதீப் நடிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது! ஏற்கெனவே சுதீப் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் ஒரு கன்னட படத்தை இயக்க இருந்தார் என்று கூறப்படுகிறது. இப்போது ரஜினியின் ‘லிங்கா’வை இயக்கி வரும் கே.எஸ்.ரவிக்குமார் ’லிங்கா’வை இயக்கி முடித்த பிறகு சுதீப் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறாராம். அதனால் தான் ரஜினியின் ‘லிங்கா’வில் அந்த வில்லன் கேரக்டரில் சுதீபை நடிக்க வைக்க கே.எஸ்.ரவிக்குமார் திட்டமிட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 2013-ல் சுதீப் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கன்னட படம் ‘பச்சன்’. இப்படத்தை தமிழில் ரீ-மேக் செய்து தயாரிக்க, சில தயாரிப்பாளர்களுக்கிடையில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;