புதிய தொழில்நுட்பத்தில் இளையராஜா!

புதிய தொழில்நுட்பத்தில் இளையராஜா!

செய்திகள் 20-Aug-2014 11:11 AM IST VRC கருத்துக்கள்

புதுமுகங்கள் அஸ்வின், ஸ்ருஷ்டி ஜோடியாக நடித்துள்ள படம் ‘மேகா’. கார்த்திக் ரிஷி இயக்கியுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தை பார்த்த சில பத்திரிகையாளர்கள் படத்தின் இறுதிகட்ட காட்சியில் சில மாறுதல்கள் செய்தால் படம் இன்னும் நன்றாக இருக்கும் என்ற கருத்தை கூற, படக்குழுவினர் அதை ஏற்று படத்தில் சில திருத்தங்கள் செய்து, இறுதி காட்சியை எல்லோரும் பாராட்டும் வண்ணம் மாற்றி அமைத்துள்ளனர். இளையராஜ இசை அமைத்திருக்கும் இப்படத்தில் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில் நுட்பத்தை யன்படுத்தி இளையராஜா இசை அமைக்கும் முதல் படம் ‘மேகா’ என்பது குறிப்பிடத்தக்கது. ஜே.எஸ்.கே ஃபிலிம் கார்பரேஷன் மற்றும் ஜி.பி ஸ்டுடியோ பிரைவேட் லிமிடட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;