சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் படம்!

சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் படம்!

செய்திகள் 20-Aug-2014 11:01 AM IST Chandru கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படம் 25 நாட்களில் 50 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்த சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் தனுஷ். இது ஒருபுறமிருக்க தயாரிப்பாளர் தனுஷும் தற்போது குஷியில் இருக்கிறார். வெற்றிமாறனுடன் தனுஷ் இணைந்து தயாரித்திருக்கும் ‘காக்கா முட்டை’ படம் ‘டொரன்டோ சர்வதேச திரைப்பட விழா’வில் திரையிடப்படுவதற்கு தேர்வாகியிருக்கிறது. சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார். இதுவரை இப்படத்திற்கான டீஸரோ, டிரைலரோ இன்னும் வெளிவராத நிலையிலேயே இப்படம் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் செப்டம்பர் மாதம் 5,6, மற்றும் 13ஆம் தேதிகளில் திரையிடப்பட இருப்பதால் சந்தோஷத்தில் மிதக்கிறார் தனுஷ்.

தேசிய விருது பெற்ற தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருப்பதால் ‘காக்கா முட்டை’க்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டீசர்


;