கேரளாவுக்குச் செல்லும் விஜய்!

கேரளாவுக்குச் செல்லும் விஜய்!

செய்திகள் 20-Aug-2014 10:39 AM IST Chandru கருத்துக்கள்

தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கும் இப்படத்தை ‘துப்பாக்கி’ தந்த சூப்பர்ஹிட் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். அனிருத்தின் மிரட்டலான இசையில் வெளிவந்த ‘கத்தி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸருக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளதால், விரைவில் வெளிவரவிருக்கும் ‘கத்தி’ ஆல்பத்திற்கும் இப்போதே செம எக்ஸ்பெக்டேஷன்.

இப்படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கான வேலைகளும் இன்னொருபுறம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் இப்படத்திற்கான படப்பிடிப்பை கேரளாவில் உள்ள சாலக்குடி, நெல்லியாம்பதி ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டிருக்கிறதாம் ‘விஜய் 58’ படக்குழு. இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். ‘நான் ஈ’ புகழ் சுதீப் வித்தியாசமான வில்லன் வேடம் ஒன்றை ஏற்றிருக்கிறாராம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை கவனிக்கிறார் ‘சதுரங்க வேட்டை’ நாயகன் ‘நட்டி’ நட்ராஜ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;