கோல்கொண்டா கோட்டையில் விஷாலின் பூஜை!

கோல்கொண்டா கோட்டையில் விஷாலின் பூஜை!

செய்திகள் 19-Aug-2014 3:39 PM IST VRC கருத்துக்கள்

‘தீபாவளி வெளியீடு’ என்ற அறிவிப்போடு துவங்கப்பட்ட படம் விஷாலின் ‘பூஜை’. ‘தாமிரபரணி’ படத்திற்குப் பிறகு விஷாலும், இயக்குனர் ஹரியும் மீண்டும் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் கட்டத்தில் இருக்கிறதாம். இப்படத்தின் கிளைமேக்ஸில் இடம் பெறும் சில காட்சிகளை ஹைதராபாத்திலுள்ள கோல்கோண்டா கோட்டையில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ஹரி. இதற்காக ஹைதராபாத் சென்றுள்ள ‘பூஜை’ பட டீம், நாளை முதல் அந்த கோட்டையில் படப்பிடிப்பை நடத்தவிருக்கின்றனர். இந்தப் படப்பிடிப்பை தொடர்ந்து இரண்டு பாடல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் ஒரு பாடலை சுவிட்சர்லாந்தில் படம் பிடிக்க இருக்கிறார்கள். இந்த இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்புடன் ‘பூஜை’யின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடுமாம். இப்படத்தில் விஷாலுடன் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். இவர்களுடன் சத்யராஜும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். சென்ற வருட தீபாவளி பண்டிகையையொட்டி விஷாலின் ‘பாண்டிய நாடு’ படம் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. விஷால் ரசிகர்களுக்கு இந்த வருட தீபாவளி ட்ரீட்டாக பூஜை திரைப்படம் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;