‘கத்தி’, ‘பூஜை’யுடன் தனுஷின் அனேகனும்!

‘கத்தி’, ‘பூஜை’யுடன் தனுஷின் அனேகனும்!

செய்திகள் 19-Aug-2014 1:39 PM IST VRC கருத்துக்கள்

விஜய்யின் ‘கத்தி’ விஷாலின் ‘பூஜை’ ஆகிய படங்களுடன் தனுஷின் ’அனேகன்’ படமும் தீபாவளி ரேசில் குத்திக்கவிருக்கிறதாம். கே.வி.ஆனந்த் இயக்கி வரும் ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை அடைந்துள்ள நிலையில் தனுஷ், அமீரா தஸ்தர் சம்பந்தப்பட்ட ஒரு டூயட் படலை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் கே.வி.ஆனந்த். இத்துடன் ‘அனேகனி’ன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடுமாம். மிகப் பெரிய பட்ஜெட்டில் ‘ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து வருகிறார். தனுஷின் ‘வேலியில்லா பட்டதாரி’ பாக்ஸ் ஆஃபீசில் ஹிட் அடித்துள்ள நிலையில், தனுஷின் அடுத்த படமாக வரவிருக்கும் ‘அனேகன்’ பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது. ஆக, விஜய்யின் ‘கத்தி’, விஷாலின் ‘பூஜை’ படங்களுடன் தனுஷின் ‘அனேகன்’ படமும் தீபாவளியன்று மோதவிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரு மடங்காகி உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;