இறுதிகட்டத்தில் போர் குதிரை!

இறுதிகட்டத்தில் போர் குதிரை!

செய்திகள் 19-Aug-2014 11:29 AM IST VRC கருத்துக்கள்

மதுரை அடுத்துள்ள உசிலம்பட்டியின் கலாச்சாரத்தை சுற்றி பின்னப்பட்ட கதையை கொண்ட படம் ’போர்க்குதிரை’. இந்த படம் குறித்து இப்படத்தை இயக்கியிருக்கும் பிரவீன் கூறும்போது, ‘‘உசிலம்பட்டி மண்ணின் மணத்துக்கும், குணத்துக்கும் ஒரு தனித்துவம் உண்டு. என்னுடைய கதை அந்த மண்ணின் மைந்தர்களின் பழக்கங்களையும் உணர்வுகளையும் படம் பிடித்து காட்டும். இவர்களுக்கென இருக்கும் ஒரு உத்வேகமான போர்குணமே 'போர் குதிரை' படத்துக்கு அடித்தளம்’’ என்றார்.

இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘போர் குதிரை' படத்தில் புதுமுகம் சைதன்யா கிருஷ்ணன், ‘சித்து ப்ளஸ் 2’ படப் புகழ் சாந்தினி ஜோடியாக நடித்து வருகிறார்கள். இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை விஸ்வா சதீஷ் ஏற்றிருக்க, நந்தன் ராஜ் இசை அமைக்கிறார். இப்படத்தை, ‘மெயின்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் மானஸ்வினி தயாரித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீ யாழினி வீடியோ பாடல் - ராஜா ரங்குஸ்கி


;