‘காவியத்தலைவன்’ ரிலீஸ் எப்போது?

‘காவியத்தலைவன்’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 19-Aug-2014 11:13 AM IST VRC கருத்துக்கள்

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த வசந்தபாலனின் ‘காவியத்தலைவன்’ படத்தின் வேலைகள் அனைத்தும் முடிந்து, நேற்று பாடல்களும் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ள இப்படப் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படமும் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. தற்போதைக்கு இப்படத்தை அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் என்றாலும், இதற்கிடையில் கார்த்தியின் ‘மெட்ராஸ்’ படம் உட்பட பல படங்கள் ரிலீசுக்கு வரிசையாக காத்திருப்பதால், ‘காவியத்தலைவன்’ படத்தை ஓரிரு வாரங்கள் கழித்துக் கூட ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணத்திலும் இருக்கிறார்கள் இப்படக் குழுவினர். ‘ஒய்நோட் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஷஷிகாந்த் தயாரித்திருக்கும் ‘காவியத்தலைவன்’ படத்தில் பிருத்திவிராஜ், சித்தார்த், வேதிகா முதலானோர் நடித்திருக்க, இப்படம் ஒரு பீரியட் படமாக உருவாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;