‘ஜில்லா’, ‘வடகறி’யை தொடர்ந்து பாதாம் பிஸ்தா!

‘ஜில்லா’, ‘வடகறி’யை தொடர்ந்து பாதாம் பிஸ்தா!

செய்திகள் 19-Aug-2014 10:32 AM IST VRC கருத்துக்கள்

‘ஜில்லா’, ‘வடகறி’ படங்களை தொடர்ந்து மஹத் நடிக்கும் படம் ‘பாதாம் பிஸ்தா’. சென்னையைச் சுற்றி நடக்கும் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் மஹத் தான் ஹீரோ! இதில் சென்னையை சேர்ந்த ஒரு லோக்கல் பையனாக, சென்னை ஸ்லாங் தமிழ் பேசி நடிக்கிறாராம் மஹத். இயக்குனர்கள் செல்வராகவன், ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த மைக்கேல் முதன் முதலாக இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையை சுற்றியே நடைபெறவிருக்கிறதாம். இந்தப் படம் தவிர ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வரும் மஹத், ஏற்கெனவே ‘சிம்பு’ என்ற தமிழ் படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார், ‘சிம்பு’ படத்தில் சிக்ஸ் பேக் கெட் அப்பில் நடிக்க இருக்கிறாராம் மஹத். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ‘பாதாம் பிஸ்தா’ முடிந்ததும் துவங்கவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;