கன்னடத்துக்கு போகும் பார்த்திபன்!

கன்னடத்துக்கு போகும் பார்த்திபன்!

செய்திகள் 19-Aug-2014 10:04 AM IST VRC கருத்துக்கள்

தனது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் பார்த்திபன். இந்த மகிழ்ச்சியோடு பார்த்திபனுக்கு இன்னும் ஒரு மகிழ்ச்சியாக அவருக்கு கன்னட படம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்தப் படத்தின் பெயர் ‘தாதா. ‘கோம்பெகலா லவ்’ படப் புகழ் சந்தோஷ் இயக்கும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார் பார்த்திபன். ஏற்கெனவே ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ள பார்த்திபனுக்கு கடந்த சில அண்டுகளாக கன்னட படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்திருந்ததாம். ஆனால் அப்போதெல்லாம் அந்த பட வாய்ப்புகளை தவிர்த்த பார்த்திபன் இப்போது ‘தாதா’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் பெங்களூரில் துவங்கவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;