இறுதிகட்டத்தை எட்டிவிட்டது ‘இது நம்ம ஆளு’

இறுதிகட்டத்தை எட்டிவிட்டது ‘இது நம்ம ஆளு’

செய்திகள் 18-Aug-2014 4:32 PM IST VRC கருத்துக்கள்

ஒரு சில ஆண்டுகளுக்கு பிறகு சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடித்து வரும் படம் ‘இது நம்ம ஆளு’. பண்டிராஜ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் பல கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு இன்று துவங்கியது. இந்த படப்பிடிப்புடன் படத்தின் டாக்கி போர்ஷன் முடிந்து விடுமாம். இதனை தொடர்ந்து ஒரு சில பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. அத்துடன் இப்படத்தின் டீஸரை விரைவில் வெளியிடுவதற்கான வேலைகளிலும் பிசியாக இயங்கி வருகிறது ‘இது நம்ம ஆளு’ பட டீம்! சிம்புவின் தம்பி, குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் படம் இது என்பதால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம். சிம்பு நடித்து வந்த ‘வாலு’ படத்தின் வேலைகளும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. அத்துடன் கௌதம் மேனன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார் சிம்பு. ‘வாலு’ படம் முடிந்துவிட்ட நிலையில் இப்படம் முதலில் வெளிவருமா? இல்லை பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளு’ தான் வெளி வருமா? என்ற குழப்பத்தில் இருக்கின்றனர் சிம்புவின் ரசிகர்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;